வேலூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் நீலம் பண்பாட்டு குழுவின் நூலக திறப்பு விழாவில் இயக்குநர் பா.இரஞ்சித் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இன்றைய சமூகத்தில் புத்தகத்தின் வாசிப்பு என்பது முக்கியமான ஒன்றாக உள்ளது. தன்னை உயர்த்திற்கான முக்கிய பங்கு புத்தகம் வாசிப்பு. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் சமூக சிந்தனையுடைய நூல்கள் கொண்ட நூலகம் திறக்க தொடர்ந்து முயற்சிகள் நடந்து வருகிறது. முந்தைய காலகட்டத்தில் இல்லாமல், தமிழ் சினிமாவில் நல்ல கருத்துடைய இதுவரை சொல்லப்படாத மாந்தர்கள் பற்றிய படைப்புகளுக்கு பெரும் வரவேற்புள்ளது. தற்போது வெளியாகியுள்ள ஜோதிகாவின் 'ராட்சசி' திரைப்படம் பள்ளி கல்வியின் அவலநிலை பற்றி பேசும் படமாக அமைந்துள்ளது வரவேற்கத்தக்கது" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
'காலா போன்ற படங்கள் நிறைய வரும்..!' - இயக்குநர் பா.இரஞ்சித் - நூலக திறப்பு விழா
வேலூர்: "காலா 2 வருவதற்கான வாய்ப்பு குறைவு. காலா மாதிரியான படைப்புகள் தமிழ் திரையில் வர வாய்ப்புள்ளது" என்று, இயக்குநர் பா.இரஞ்சித் கூறியுள்ளார்.
ranjith
அதனை தொடர்ந்து காலா இரண்டாம் பாகம் வருமா என்று செய்தியாளர் கேட்ட கேள்விற்கு, 'காலா 2' வருதற்கான வாய்ப்பு குறைவு. 'காலா' போன்ற படைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்று பதிலளித்தார்.