தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராஜிவ் படுகொலை குற்றவாளி முருகன் சிறையில் 17ஆவது நாளாக உண்ணாவிரதம் - சிறையில் முருகன் உண்ணாவிரதம்

வேலூர்: மனைவி, தாயாருடன் காணொலி அழைப்பில் பேச அனுமதி அளிக்கப்படாததற்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலூர் மத்திய சிறையில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை குற்றவாளி முருகன் தொடர்ந்து 17ஆவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுவருகிறார்.

Rajiv murder convict murugan 17th day continuous fasting in jail
ராஜீவ் கொலை குற்றிவாளி முருகன்

By

Published : Jun 17, 2020, 11:27 AM IST

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன் இலங்கையில் உள்ள தனது தாயுடன் காணொலி அழைப்பில் பேச அனுமதி கோரியுள்ளார்.

மேலும், வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள அவரது மனைவி நளினியுடன் காணொலி அழைப்பில் பேச அனுமதி கோரினார். இதற்கு அனுமதி அளிக்காத நிலையில், கடந்த 1ஆம் தேதிமுதல் இன்று 17ஆவது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

சிறைத் துறை அலுவலர்கள் தொடர்ந்து முருகனிடம் உண்ணாவிரதத்தை கைவிடும்படி தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து 17ஆவது நாளாக உண்ணாவிரதத்தை மேற்கொண்டுவரும் முருகனுக்கு, இதுவரை இரண்டு குளுக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளதாக அவரது வழக்குரைஞர் புகழேந்தி தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details