முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினியுடனும், மத்திய சிறையில் உள்ள அவரது கணவர் முருகனுடனும் வழக்கறிஞர் புகழேந்தி இன்று சந்தித்து பேசினார். 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள தங்களை விடுதலை செய்யக்கோரி சிறையில் உள்ள நளினி கடந்த எட்டு நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் நிலையில், இருவரையும் வழக்கறிஞர் புகழேந்தி சந்தித்து பேசினார்.
இருவரையும் சந்தித்த பின்னர் வழக்கறிஞர் புகழேந்தி கூறுகையில், "தங்களை விடுதலை செய்யக்கோரி அரசுக்கு கோரிக்கை வைத்து வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினி எட்டாவது நாளாகவும், மத்திய சிறையில் உள்ள முருகன் 15ஆவது நாளாகவும் உண்ணாவிரதம் மேற்கொண்டுவருகின்றனர். இதனால் முருகன் மிகுந்த உடல் சோர்வுடன் காணப்படுகிறார்.