ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான நளினி, வேலூர் பெண்கள் தனிச் சிறையில் 29 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த நிலையில் இன்று(நவ.17) அவருக்கு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண், பல், சிறுநீரகம், ரத்தம் உள்ளிட்ட முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
வேலூர் அரசு மருத்துவமனையில் நளினிக்கு முழு உடல் பரிசோதனை!
வேலூர்: ராஜீவ் காந்தி கொலை வழக்கு நளினிக்கு மாவட்ட அரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது.
rajiv-gandhi-murder-case-nalini
காலை 9.30 மணிக்கு காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் சிறையிலிருந்து அழைத்து வரப்பட்ட நளினி, பரிசோதனை முடிந்தப் பின் தனிச்சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். முன்னதாக, வயது மூப்பு மற்றும் உடல் உபாதைகள் காரணமாக நளினிக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளவிருப்பதாக சிறைத்துறையினர் தெரிவித்திருந்தனர்.
இதையும் படிங்க:சிகிச்சைக்காக 3 மாதம் பரோல் - நளினி கடிதம்!