ஆளுநர் புரோகித் இரக்கமில்லா அரக்கனா...! கிளப்பிவிட்ட துரைமுருகன் - துரைமுருகன்
வேலூர்: ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் மவுனம் காப்பது அவரது இருதயத்தில் இரக்கம் இல்லை என்றுதான் பொருள் என திமுக பொருளாளர் துரைமுருகன் வேதனைபட தெரிவித்துள்ளார்.
duraimurugan
வேலூர் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயன் வேலூரில் புதிய திருமண மண்டபம் ஒன்றைக் கட்டியுள்ளார். இந்த மண்டபத்தின் திறப்பு விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், கடைசி நேரத்தில் மு.க. ஸ்டாலின் மண்டபம் திறப்பு விழாவிற்கு வரவில்லை. அவருக்கு பதில் திமுக பொருளாளர் துரைமுருகன் விழாவில் பங்கேற்றார்.
இனிமேலும், அவர்களை விடுதலை செய்யாவிட்டால் ஆளுநருக்கு இருதயத்தில் இரக்கம் என்றுதான் பொருள். இரக்கமில்லா அரக்கன் என்று கம்பர் ராவணேஸ்வரனை சொன்னார்.அப்படி தமிழ்நாடு மக்கள் சொல்லுகிற நிலையை ஆளுநர் ஏற்படுத்த மாட்டார் என்று நான் நம்புகிறேன்.
ஆளுநர் பிள்ளை குட்டி பெற்றவர். அரசியலில் நீண்ட காலம் இருந்தவர். எல்லோரிடத்திலும் அன்பாகப் பழகக் கூடியவர். எனவே இவர்களை விடுதலை செய்து அவருடைய வாழ்க்கை வரலாற்றில் ஒரு சிறப்பு அம்சத்தைப் பெற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்' எனக் கூறினார்.