தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூர் ஐடி ரெய்டு - தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் - நாடாளுமன்ற தேர்தல் 2019

சென்னை: திமுக பொருளாளர் துரை முருகனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் முடிவில் 11.63 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வேலூர் ஜடி ரெய்டு - தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை தாக்கல்

By

Published : Apr 3, 2019, 4:51 PM IST

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பள்ளி, கல்லூரியில் வருமான வரி சோதனை நடந்தது. இதில் முதல் நாள் முடிவில் துரை முருகன் வீட்டில் 10 லட்ச ரூபாய் கணக்கில் காட்டப்படாத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து திமுக பிரமுகர் சீனிவாசன் என்பவரின் சிமென்ட் குடோனில் நடந்த சோதனையில் 11 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது..

இந்நிலையில், மூன்று நாட்களாக நடந்த வருமான வரி சோதனையின் முடிவில் 11 கோடியே 63 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரி துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து இது தொடர்பான அறிக்கையை வருமான வரித்துறையினர் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details