வேலூர்:வேலூரில் உள்ள அரசு பெண்ட்லேன்ட் மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு ரூ.198 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடப் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "வேலூரில் கட்டப்பட்டு வரும் பெண்ட்லேன்ட் மருத்துவமனை
7 மாடி கட்டடமாக கட்டப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை சுமார் 18 மாதத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
வேலூர் - விரிஞ்சிபுரம் பாலாற்றில் மேம்பாலம் கட்டுவதற்கான திட்டங்கள் மதிப்பீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. திட்ட மதிப்பீடு பணிகள் முழுமை பெற்ற பின்னர், தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், தமிழகத்தில் உள்ள ரயில்வே கிராசிங் பகுதிகளில் மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.