வேலூரை அடுத்த ஊசூர் பகுதியைச் சேர்ந்த பெண், சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பாஸ்வா என்ற இளைஞர் அப்பெண்ணின் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றுள்ளார். அதை கண்ட பொதுமக்கள் அந்த இளைஞரை விரட்டி பிடித்து கட்டி வைத்து சரமாரியாக அடித்துள்ளனர். பிறகு அந்த இளைஞரை அரியூர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி- திருடனுக்கு தர்ம அடி! - நகை திருட்டு
வேலூர்: சாலையில் சென்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயன்றவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
திருடனுக்கு தர்ம அடி!
பொது க்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த பாஸ்வா வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் அரியூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இவர் ஏற்கனவே 2019ஆம் ஆண்டில் செயின் பறிப்பு வழக்கில் சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விமான நிலைய கழிவறையில் துப்பாக்கித் தோட்டாக்கள்: காவல் துறை விசாரணை!