தமிழர் திருநாளாகிய பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாட்டிலுள்ள 2 கோடியே 5 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்புப் பொங்கல் பரிசு வழங்க, தமிழ்நாடு அரசு 2,245 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
இதையடுத்து, திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள 3 லட்சத்து 12 ஆயிரத்து 971 குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசு, அந்தந்த கிராம நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
வாணியம்பாடி நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசு பெறும் மக்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, ஐந்து கிராம் ஏலக்காய், இரண்டு அடி நீள கரும்புத்துண்டு ஆகியவற்றுடன் 1000 ரூபாய் ரொக்கப்பணம் அடங்கிய பொங்கல் பரிசுப் பை இன்று வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, வாணியம்பாடி நேதாஜி நகரைச் சேர்ந்த கற்பகம் கூட்டுறவு நியாயவிலைக் கடையில் நேற்று முதல் பொங்கல் பரிசு வாங்குவதற்காக டோக்கன் விநியோகிக்கப்பட்டுவருகிறது. அப்பகுதியிலுள்ள 1200 குடும்ப அட்டைதாரர்களில், நாள் ஒன்றுக்கு 300 பேருக்கு மட்டுமே இந்த டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டும் கூட ஏராளமான பொதுமக்கள் அங்கே குவிந்ததையடுத்து, பாதுகாப்புக்காக காவல் துறையினர் வரவழைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: பெரம்பலூரில் 282 நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசு விநியோகம்