வேலூர் மாவட்டம் வாலஜாப்பேட்டை அடுத்த ஒழுகூர் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் வழங்கப்படவில்லை எனவும், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகீறது.
முறையாக குடிநீர் வழங்கவில்லை பொதுமக்கள் சாலை மறியல் - சாலை மறியல்
வேலூர்: வாலாஜாப்பேட்டை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
File pic
இந்நிலையில் குடிநீர் வழங்காததை கண்டித்து அப்பகுதி பொது மக்கள் காலி குடங்களுடன் வாலஜா- தலங்கை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து, அங்கு சென்ற வாலாஜாபேட்டை காவல்துறையினர்-வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததனர். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இச்சம்பவத்தால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.