கர்நாடக மாநிலத்திலிருந்து வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த சேர்காடு பகுதிக்கு, தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் கடத்தி வரப்படுவதாக திருவலம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் காட்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் துரைப்பாண்டியன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட இரண்டு லாரிகள் அடுத்தடுத்து வேகமாக வந்தன. லாரிகளை நிறுத்த முயற்சி செய்தபோது நிற்காமல் சென்றதையடுத்து காவல்துறையினர் இரண்டு லாரிகளையும் துரத்தி சென்றனர். அதனால் திருவலம் அடுத்த சிவானந்தம் நகர் பகுதியில் இரண்டு லாரிகளையும் நிறுத்தி விட்டு லாரி ஓட்டுனர்கள் இறங்கி தப்பி ஓடினர்.