தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"மண்டமேல இருக்க கொண்டைய மறந்துட்டோமே".. ஏடிஎம்மி கொள்ளை அடிக்க முயன்ற நபர் சிக்கியது எப்படி? - வேலூர் செய்திகள்

ATM theft: வேலூரில் ஏடிஎம் மையத்தில் முகமூடி அணிந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை சத்துவாச்சாரி போலீசார் கைது செய்தனர்.

theft attempt
ஏடிஎம் கொள்ளை முயற்சி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2023, 6:30 PM IST

வேலூர்:வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதி 2-க்கு உட்பட்ட 19வது தெருவில் சப்தகிரி என்ற வணிக வளாகம் ஒன்று உள்ளது. இந்த வணிக வளாகத்தில் பேங்க் ஆப் மகாராஷ்டிரா என்ற தனியார் வங்கி இயங்கி வருகிறது. அந்த வங்கியின் முன்பகுதியில் ஏடிஎம் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 29) அதிகாலை சுமார் 3 மணியளவில் முகமூடி அணிந்த ஒருவர் அந்த ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, அவர் கையில் வைத்து இருந்த இரும்புக் கம்பியால் ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமராவை உடைத்ததுடன், கத்தி மூலம் அலாரம் வயரையும் துண்டித்து உள்ளார். அப்போது ஏடிஎம் மையத்திலிருந்த அலாரம் ஒலிக்கத் தொடங்கியதும், அந்த நபர் அங்கு இருந்து தப்பியோடி உள்ளார். பின்னர், இது குறித்து வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு தகவல் சென்றுள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில், உடனடியாக தலைமை அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் சத்துவாச்சாரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளனர். அதனடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது, ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர், அங்கிருந்து தப்பிச் சென்றது தெரிய வந்து உள்ளது. பின்னர் போலீசார் ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை செய்தனர்.

அப்போது முகமூடி அணிந்த ஒருவர் ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க முயற்சி மேற்கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. பின்னர், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடய அறிவியல் சோதனையும் நடத்தப்பட்டது. மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்தபோது, பிரசன்னா என்ற நபர் திருட்டு முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்து உள்ளது. மேலும், அவர் காட்பாடியைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்து உள்ளது. இதனையடுத்து போலீசார் அந்த நபரை கைது செய்து உள்ளனர்.

தற்போது ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் ஒலித்ததால் ஏடிஎம் இயந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான பணம் கொள்ளை போகாமல் தப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து பிரசன்னாவை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:Coutrallam falls today update: நீர்வரத்து அதிகரிப்பு- சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!

ABOUT THE AUTHOR

...view details