மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே இருப்பதால் தமிழ்நாட்டு அரசியல் களம் பரப்புரையால் சூடுபிடித்துள்ளது. பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அதிமுக மெகா கூட்டணி அமோக வெற்றி பெறும்: ராமதாஸ் நம்பிக்கை...!
திருவள்ளூர்: மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் அமைந்துள்ள மெகா கூட்டணி தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ராமதாஸ்
இந்நிலையில், அரக்கோணம் மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணியின் பாமக வேட்பாளர் ஏ.கே மூர்த்தியை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ”மக்களுக்கு அதிகளவிலான நலத்திட்டங்களை அதிமுக செய்துவருகிறது. அதிமுக தலைமையில் அமைந்துள்ள மெகா கூட்டணி தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றிபெறும். அதுமட்டுமில்லாமல் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வெற்றிபெறும்” என்றார்.
Last Updated : Apr 9, 2019, 12:29 PM IST