தமிழ்நாடு முழுவதும் பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஆண்கள் 18,664 பேர், பெண்கள் 22,050 பேர் என மொத்தம் 40,174 பேர் இந்த தேர்வை எழுதியுள்ளனர்.
பிளஸ் டூ தேர்வு முடிவு: 85.47% மாணவர்கள் தேர்ச்சி! - exam result
வேலூர்: பிளஸ் டூ தேர்வில் வேலூர் மாவட்டத்தில் 85.47 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இன்று காலை 9.30 மணி அளவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 85.47 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது ஆண்கள் 15,059 பேரும், பெண்கள் 19,741 பேரும் என மொத்தம் 34,800 பேர் வேலூர் மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சதவீத அடிப்படையில் ஆண்கள் 80.18% மற்றும் பெண்கள் 89.53 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளை பொறுத்தவரை வேலூர் மாவட்டத்தில் 170 அரசுப் பள்ளிகள் உள்ளன. இதில் ஆண்கள் 20,709 பேர், பெண்கள் 16,475 பேர் பிளஸ் டூ தேர்வு எழுதினர். இதில் 79.31 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.