வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டு பகுதியில் நேற்று இரவு (டிச. 18) சந்தேகத்திற்கிடமான வகையில் பெண் ஒருவர் நீண்ட நேரமாகச் சுற்றிவந்துள்ளார். இதைக் கண்ட நோயாளிகளுடன் வந்த பெண்கள், அவரை அழைத்து விசாரித்தபோது அவர் ஆண் குரலில் பேசியுள்ளார்.
பெண்கள் அலறல்
இதனால், அதிர்ச்சியடைந்த பெண்கள் பெண் வேடமிட்டு குழந்தை கடத்த வந்ததாகக் கூறி சத்தம் போட்டனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்தவர்கள் அந்த நபரின் ஆடைகளைக் கிழித்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். பின்னர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் அந்த நபரை ஒப்படைத்துள்ளனர்.