வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே விளாப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பட்டப்படிப்பு, முதுகலை படிப்பை முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.
'யாரையும் சார்ந்து பெண்கள் வாழக்கூடாது' - கிரண் பேடி - pondicherry covernor kiran bedi
வேலூர்: 'பெண்கள் எப்போதும் யாரையும் சார்ந்திருக்கக் கூடாது' என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார்.
covernor kiran bedi
அப்போது பேசிய கிரண் பேடி, பெண்கள், அவர்களது வாழ்நாள் முழுவதும் கற்ற கல்வியை வாழ்க்கைக்கு உதவும் வகையில் பயன்படுத்த வேண்டும் படிப்பதை நிறுத்திவிடாமல் தொடர்ந்து கல்வியின் மூலம் முன்னேற வேண்டும் என்று கூறினார். மேலும், பெண்கள் யாரையும் சார்ந்திருக்கக் கூடாது, கல்வியினால் வாழ்க்கை தரத்தை மட்டும் அல்ல சமூக அந்தஸ்தையும் உயர்த்த பாடுபடுங்கள் என்றார்.