தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விபத்தில் மூளைச்சாவு அடைந்த உடற்கல்வி ஆசிரியரின் உடலுறுப்புகள் தானம் 5 பேருக்கு மறுவாழ்வு. - cmc ranipet

திருத்தணி அருகே நடந்த விபத்தில் மூளைச்சாவு அடைந்த உடற்கல்வி ஆசிரியரின் உடல் உறுப்புகள் ஐந்து பேருக்கு தானம் செய்யப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டது.

விபத்தில் மூளைச்சாவு அடைந்த உடற்கல்வி ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம்
விபத்தில் மூளைச்சாவு அடைந்த உடற்கல்வி ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம்

By

Published : May 24, 2023, 6:41 PM IST

விபத்தில் மூளைச்சாவு அடைந்த உடற்கல்வி ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம்

வேலூர்:விபத்தில் மூளைச்சாவு அடைந்த உடற்கல்வி ஆசிரியரின் உடல் உறுப்புகள் ஐந்து பேருக்கு தானம் செய்யப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. திருத்தணி அருகே நடந்த கோர விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த உடற்கல்வி ஆசிரியரின் உடலுறுப்புகள் தானம் அளிக்கப்பட்டன.

இதன்மூலம் ஐந்து பேருக்கு மறுவாழ்வு கிடைத்து இருப்பதாக சிஎம்சி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் வீரமங்கலம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் எபிநேஷன் (48). இவர் திருத்தணி அருகில் உள்ள அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

கடந்த 21 ஆம் தேதி மருதாலம் கூட்டு ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மணல் லாரி எபிநேஷன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட எபிநேஷன் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் எபிநேஷனை மீட்டு சிகிச்சைக்காக ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி எபிநேஷன் செவ்வாய்க்கிழமை மூளை சாவடைந்தார். எபினேஷனின் மற்ற உறுப்புகள் நல்ல முறையில் இயங்கியதால் மருத்துவர்கள் உடனடியாக எபிநேஷனின் உடல் உறுப்புகளை தானம் அளித்திட திட்டமிட்டனர்.

மேலும் இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் எபினேஷனின் குடும்பத்தினரிடம் உடல் உறுப்பு தானத்திற்காக அனுமதி கேட்டு பின்னர் அவரது உறவினர்களின் சம்மதத்துடன் உடல் உறுப்புகளை தானம் செய்தனர். இதன் அடிப்படையில் எபிநேஷனின் இதயம் மற்றும் நுரையீரல் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கும்,

கல்லீரல் மற்றும் இடது புற சிறுநீரகம் ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனைக்கும், வலதுபுற சிறுநீரகம் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டது. மேலும் அங்கு தயார் நிலையில் இருந்த நோயாளிகளுக்கு எபிநேஷனின் உடல் உறுப்புகள் பொருத்தப்பட்டன. இதன்மூலம் 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக சிஎம்சி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மூளை சாவு அடைந்த எபிநேசனுக்கு கலைச்செல்வி என்ற மனைவியும் பால் ஆபிரகாம், கிரேஸ்ஷன், கத்ரின் ரோஸ் ஆகிய இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இறந்தும் ஐந்து பேரில் இன்னும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என கூறும், உறவினர்கள் கண் கலங்க வைக்கும் வகையில் தங்கள் துயர் கலந்த நெகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்நெகிழ்ச்சி சம்பவத்தை தொடர்ந்து மருத்துவமனை உடல் உறுப்பு தானங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் எபிநேஷனின் உடல் உறுப்பு தானம் குறித்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் சமூக வலைதள வாசிகளின் கவணத்தை பெரும் அளவில் ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க:என்ஐஏ இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோதமான அமைப்பு: வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சிறப்பு நேர்காணல்

ABOUT THE AUTHOR

...view details