வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(52). இவர் இரவு நேரங்களில் ஜவ்வாது மலை காப்புக் காடுகளில் வேட்டைக்காக சென்று வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் காட்டிற்கு வேட்டைக்குச் சென்ற முருகனை காப்புக்காட்டில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த காவல்துறையினர் சந்தேகத்திற்குறிய முறையில் நடப்பதாக கூறி விசாரணை மேற்கொண்டனர்.
நாட்டுத் துப்பாக்கி வைத்து வேட்டையாடியவர் கைது! - கைது
வேலூர்: திருப்பத்தூர் அருகே சட்ட விரோதமாக விலங்குகளை வேட்டையாடியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டு துப்பாக்கி வைத்து வேட்டையாடியவர் கைது
அப்போது அவர் லைசென்ஸ் இல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருந்து தெரியவந்தது. மேலும், சட்ட விரோதமாக இரவு நேரங்களில் ஜவ்வாதுமலை காப்புக் காடுகளில் விலங்குகளை வேட்டையாடி அதை விற்பனை செய்து வந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர், திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.