குடியாத்தம் அடுத்த தாட்டிமானபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாராயண சுவாமி என்பவரது மனைவி வனரோஜா (65). இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி வெளியூரில் இருக்கிறார்.
வனரோஜாவின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் அவரது மகனும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்தார்.
இதனிடையே, மருமகளும் மாமியாரும் அருகருகே தனித்தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அருகிலுள்ள கல்லபாடி என்னும் ஊரில் திருவிழா நடைபெற்றது.
அதைக் காண அனைவரும் சென்றுள்ளனர். அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டில் தனியாக இருந்த வனரோஜாவை பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சி செய்துள்ளார். பின்னர் கல்லால் தலையில் தாக்கியதில் வனரோஜா பரிதாபமாக உயிரிழந்தார்.