கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக திருப்பத்தூரில் ஆங்காங்கே குளம், குட்டை போல் மழை நீர் தேங்கி கிடக்கிறது. இந்த நிலையில், தேங்கிக்கிடக்கும் மழை நீரால் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது.
ஏற்கனவே திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பலருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்த பரிசோதனை நடைபெற்றுவருகிறது.
இந்தக் காரணத்தால் திருப்பத்தூர் சரக துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேல், திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கும், பொதுமக்களுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கினார்.
டெங்கு பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள காவலர்களுக்கு நிலவேம்பு கசாயம் விநியோகம் இது குறித்து டிஎஸ்பி தங்கவேல் கூறுகையில், காவலர்களுக்கு டெங்கு காய்ச்சல் வராமல் இருந்தால்தான் மக்களை நாங்கள் காப்பாற்ற முடியும். அதனால் எங்களால் முடிந்த நிலவேம்பு கசாயத்தை காவலர்களுக்கு வழங்கினோம் என்றார்.