தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணமான ஒருவாரத்தில் பெண் தற்கொலை - புதுப்பெண் தற்கொலை

வேலூர்: திருப்பத்தூரில் திருமணமாகி ஒரு வாரம் ஆன நிலையில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமான ஒருவாரத்தில் பெண் தற்கொலை

By

Published : Jul 21, 2019, 3:18 PM IST

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சீரங்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் சந்தியா (19). இவருக்கும் திருப்பத்தூரை அடுத்த கதிரமங்கலம் பகுதியைச் சேர்ந்த கௌசிக் (25) என்பவருக்கும் ஜூலை 15 ஆம் தேதி பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

திருமணம் ஆனதிலிருந்து சந்தியா தனிமையிலேயே இருந்து வந்ததாகவும் மேலும் திருமணத்திற்கு முன்னதாகவே தனக்கு கௌசிக்கை பிடிக்கவில்லை என்றும் தனது பெற்றோரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன் தினம் சந்தியா வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக் பார்த்த கணவர் கௌசிக் உடனடியாக அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தார்.

திருமணமான ஒருவாரத்தில் பெண் தற்கொலை

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நேற்று தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே சந்தியா உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் உடற்கூறாய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details