வேலூர் மாவட்டம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மூன்று ஆகிய மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக விஜயகுமார் ஐபிஎஸ், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மயில்வாகணன் ஐபிஎஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக விஜயகுமார் நேற்று(நவ.17) பதவியேற்றுக்கொண்டார். வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்காளர் பிரவேஷ்குமார் ஒருவாரம் விடுமுறையில் இருப்பதால் வேலூர் மாவட்டத்தையும் விஜயகுமார் கூடுதல் பொறுப்பாக கவனிக்கிறார்.
திருப்பத்தூர் மாவட்டக் கண்காணிப்பாளராக பதவியேற்றுள்ள விஜயகுமார், முன்னதாக தஞ்சாவூர், கிருஷ்ணகிரியில் இணை காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.