முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்துவரும் முருகன் வேலூர் மத்திய சிறையில் உள்ளார். இவரது அறையில் கடந்த மாதம் 18ஆம் தேதி செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரது சிறைச் சலுகைகள் ரத்து செய்யப்பட்டன.
சிறையில் முருகன் 4ஆவது நாளாக பட்டினிப்போராட்டம் - ராஜீவ் காந்தி கொலை வழக்கு
வேலூர்: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலிருக்கும் முருகன் நான்காவது நாளாக பட்டினிப் போராட்டம் மேற்கொண்டுள்ளார்.
முருகன்
இந்நிலையில், தன்னை தனிச்சிறையில் வைத்து கொடுமைப்படுத்துவதாகவும் மீண்டும் பழைய சிறைக்கு மாற்றக்கோரியும் முருகன் தொடர் பட்டினிப் போராட்டம் மேற்கொண்டுவந்தார்.
சிறை அலுவலர்கள் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து பட்டினிப் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் அதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 11ஆம் தேதி முதல் சிறையில் பட்டினிப் போராட்டம் நடத்திவருகிறார். அதன்படி இன்று அவர் நான்காவது நாளாக உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் பட்டினிப் போராட்டம் மேற்கொண்டுள்ளார்.