வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் முருகன், நளினி ஆகியோர் லண்டன், இலங்கையில் உள்ள தனது குடும்பத்தினருடன் காணொலி மூலம் பேச அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தனர். அதன்படி, இருவரும் 10 நாள்களுக்கு ஒரு முறை தலா 10 நிமிடங்கள் காணொலி மூலம் பேச உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.