தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“அன்பு ஒன்றுதான் அனாதை” - நாய்க்குட்டிக்கு பாலூட்டும் குரங்கு! - வேலூர் மாவட்டம் பொன்னை பேருந்து நிலையம்

வேலூர் மாவட்டத்தில் நாய்க்குட்டிக்கு குரங்கு பால் கொடுத்து வளர்க்கும் நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்று வருகிறது.

“அன்பு ஒன்றுதான் அனாதை” - நாய்குட்டிக்கு பாலூட்டும் குரங்கின் நெகிழ்ச்சி சம்பவம்
“அன்பு ஒன்றுதான் அனாதை” - நாய்குட்டிக்கு பாலூட்டும் குரங்கின் நெகிழ்ச்சி சம்பவம்

By

Published : Nov 28, 2022, 1:54 PM IST

வேலூர்: பொன்னை பேருந்து நிலையத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஐந்து குட்டிகளை நாய் ஈன்றுள்ளது. அதில் நான்கு குட்டிகளை எடுத்துக்கொண்டு தாய் நாய் சென்று விட்டது. இந்நிலையில் ஒரு நாய்க்குட்டி மட்டும் அங்குள்ள மருந்து கடை அருகே வழக்கமாக வந்து செல்லும்.

அப்பகுதியில் சுற்றித் திரிந்த நாய்க்குட்டியை குரங்கு பார்த்துள்ளது. அதனை தன்னுடைய குழந்தையாக எண்ணி அடக்கமாக வைத்துக்கொண்டு, பால் கொடுத்து வளர்த்து வருகிறது. பொதுவாக நாய்களுக்கும் குரங்குகளுக்கும் ஒற்றுமை இருந்ததில்லை.

நாய்க்குட்டிக்கு பாலூட்டும் குரங்கு!

இருப்பினும் நாய்க்குட்டியை அதன் குட்டியாக எண்ணி வளர்க்கும் குரங்கின் செயல் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. இதனை அப்பகுதி மக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:கழுத்தை நெறிக்கும் ஆன்லைன் கடனை தவிர்ப்பது எப்படி.?

ABOUT THE AUTHOR

...view details