தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடமாடும் உரக்கடையை தொடக்கி வைத்த வேளாண் துறை - நடமாடும் உரக்கடை

வேலூர்: வேளாண் துறை சார்பில் விவசாயிகள் இருக்கும் இடத்திற்கே உரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

mobile-fertilizer
mobile-fertilizer

By

Published : Apr 16, 2020, 5:17 PM IST

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனால் விவசாயத்திற்கு தேவையான உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் வாங்க முடியாமல் விவாசயிகள் தவித்து வருகின்றனர்.

இந்த பிரச்னையை தவிர்க்கும் விதமாக அறுவடை நடவுக்கு தேவையான உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாயிகள் இருக்கும் இடத்திற்கே கொண்டுச் சென்று விற்பனை செய்ய வேளாண் துறை மூலம் வேலூர் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அரசு உரிமம் பெற்ற சில்லரை விற்பனை உரக்கடைகள் மூலம் தற்போதுவரை 33 வாகனங்களில் வேளாண் - தோட்டக்கலைக்கு தேவையான யூரியா, டி.ஏ.பி, காம்பஸ், பொட்டாஸ் உள்ளிட்டவையும், பூச்சிக் கொல்லிகளும் விவசாயிகளின் நிலத்துக்கே கொண்டுச் சென்று மானிய விலையில் விவசாயிகளின் ஆதார் அட்டை மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

நடமாடும் உரக்கடை

இன்று (ஏப்.16) காட்பாடி அடுத்த கரசமங்கலத்தில் உள்ள கீரை விவசாயிகளுக்கு உரம் நேரடியாக கொண்டுச் சென்று விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட வேளாண்மை உதவி தரக்கட்டுப்பாட்டு இயக்குநர் சுஜாதா கூறும் போது, ஊரடங்கால் வெளியில் வர முடியாத விவசாயிகள் உரம் கிடைக்காமல் பாதிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து இந்த திட்டத்தை தொடங்கியுள்ளோம்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 33 வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. வரும் காலத்தில் தேவைக்கு ஏற்ப நடமாடும் உரக்கடை எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அதேபோல் தங்கள் பகுதிக்கு உரம் தேவைப்படும் விவசாயிகள் உழவன் செயலி மூலமோ அல்லது என்னுடைய தொலை பேசி எண் 9443099945 என்ற எண்ணுக்கு போன் அல்லது வாட்ஸ் ஆப் மூலம் தகவல் கொடுத்தால் உடனடியாக உரம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இலவச முகக் கவசங்களை வேளாண் துறை வழங்கி வருகிறது என்றும் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details