தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘வேலூர் மாவட்டத்துக்கு 2,330 கோடி ரூபாயில் சாலை திட்ட பணிகள்’ - வேலூர் மாவட்ட செய்திகள்

வேலூர்: மாவட்டத்தில் சாலை விபத்துகளை தவிர்க்க 2330 கோடி ரூபாய் செலவில் புதிய சாலை திட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்தார்.

‘வேலூர் மாவட்டத்துக்கு 2,330 கோடி ரூபாயில் சாலை திட்ட பணிகள்’
‘வேலூர் மாவட்டத்துக்கு 2,330 கோடி ரூபாயில் சாலை திட்ட பணிகள்’

By

Published : Jan 24, 2020, 11:51 PM IST

தமிழ்நாடு பத்திரப்பதிவு துறை மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே சி வீரமணி மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் ஆகியோர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அமைச்சர் கே சி வீரமணி கூறுகையில், இந்தியாவில் விபத்துகள் அதிகமாக நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக உத்தர பிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் சாலை விபத்துகள் நடைபெறுகிறது.

கடந்த 2017இல் மட்டும் இந்தியாவில் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 913 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் விபத்துகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேலூர் மாவட்டத்தை பொருத்தவரை விபத்துகள் அதிகம் ஏற்படும் பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளது. அதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இந்த விபத்துகளை தவிர்ப்பதற்காகவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் புதிதாக பல்வேறு திட்டங்களை தயார் செய்துள்ளோம். அதில் குறிப்பாக வேலூர் புறவழிச்சாலை 220 கோடி ரூபாய் செலவில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதேபோன்று ரூ. 95 கோடியில் குடியாத்தம் புறவழிச் சாலைத் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

வேலூர் சத்துவாச்சாரி ஆர்டிஓ சாலை சந்திப்பில் பொது மக்களின் நீண்டநாள் கோரிக்கையான சுரங்கப்பாதை அமைக்க 1.81 கோடி ரூபாய் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்காக மத்திய அரசு 56 கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. ஆகமொத்தம் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை விபத்துகளை தடுக்க 2330 கோடி ரூபாயில் புதிய சாலை திட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

‘வேலூர் மாவட்டத்துக்கு 2,330 கோடி ரூபாயில் சாலை திட்ட பணிகள்’

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பேசுகையில், அமைச்சர் குறிப்பிட்டதுபோல் 2330 கோடி ரூபாயில் புதிய திட்டப் பணிகள் மேற்கொள்ளும்போது வேலூரில் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு இந்த சாலை பணிகள் முக்கிய பங்காற்றும் என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details