வேலூர்:கடந்த மே மாதம் கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து டி.கே.சிவகுமார் கர்நாடக மாநிலத்தின் துணை முதலமைச்சாராக பதவியேற்றார். மேலும், அவருக்கு நீர்வளத்துறை அமைச்சர் பொறுப்பாக வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மகளிருக்கு இலவச பேருந்து, இல்லத்தரசிகளுக்கு 2 ஆயிரம் ரூபாய், வேலையில்லா பட்டதாரிகளுக்கு 3 ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட திட்டங்கள் அமல்படுத்தப்பட்டது. அதேநேரம், மேகதாது அணையின் பணிக்காக ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என டிகே சிவகுமார் அறிவித்தார்.
இந்த நிலையில், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் விரைவில் அணை கட்டுவோம்எ எனவும், அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனவும் தெரிவித்தார். இதற்கு தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு அரசியல் பிரமுகர்கள், கட்சித் தலைவர்கள் தரப்பில் இருந்தும் மற்றும் விவசாயிகள் தரப்பில் எதிர்ப்புகளும், கண்டனங்களும் வந்த நிலையில் உள்ளது.
இதனிடையே, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், "தண்ணீருக்காக நாங்கள் பாதயாத்திரை மேற்கொண்டோம். ஒருபோதும் இதில் இருந்து பின்வாங்க மாட்டோம். இதனால் தமிழ்நாட்டிற்கு எந்த வித பாதிப்பும் கிடையாது. ஆகையால், இதை சகோதரத்துவத்துடன் தமிழ்நாடு அணுக வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் வேலூர் மாவட்டத்தில் குடிநீர் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், "வேலூர் மாவட்டத்தில் தற்போது காவிரி குடிநீர், பராமரிப்பு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.