தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘காட்பாடியில் தொழிற்பேட்டை அமைக்கப்படும்’ - அமைச்சர் துரைமுருகன் உறுதி! - Vellore news

வேலூரில் நியாய விலைக் கடைகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் துரைமுருகன், இந்த ஆண்டு காட்பாடியில் கட்டாயம் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

காட்பாடியில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் - அமைச்சர் துரைமுருகன் உறுதி!
காட்பாடியில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் - அமைச்சர் துரைமுருகன் உறுதி!

By

Published : Apr 9, 2023, 6:45 PM IST

காட்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு

வேலூர்:காட்பாடி அடுத்த ஓடைப் பிள்ளையார் கோயில் அருகே 15 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய பயணியர் நிழற்கூடம் மற்றும் காட்பாடி அடுத்த செங்குட்டை பகுதியில் 8 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடைகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இதன் பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்ட பொருட்கள் தரமானதாக இருந்ததில்லை என தொடர்ந்து பொதுமக்கள் தெரிவித்து வந்தனர். ஆனால் தற்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் வழங்கப்படும் பொருட்கள் அனைத்தும் தரமானப் பொருட்களாக இருக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் தரமானப் பொருட்கள் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகிறது. காட்பாடியில் 200 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை இந்த ஆண்டு தொடங்கப்படும். அதேபோல் காட்பாடியில் கூடுதலாக ரயில்வே அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

காட்பாடியில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் விதமாக, கூடுதலாக காவல் நிலையம் போன்றவற்றை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு காட்பாடியில் தொழிற்பேட்டை அமைக்கப்படும். எனவே இதன் மூலம் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 100க்கணக்கான படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்” என கூறினார்.

இதையும் படிங்க:அமைச்சர் துரைமுருகன் குறித்து அவதூறு பரப்பிய அதிமுக நிர்வாகி கைது.. நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details