தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நீர்நிலைகளை யார் ஆக்கிரமித்து இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை...!'

நீர்நிலைகள், ஏரிகள், ஆறுகள் ஆகியவற்றில் யார் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார்.

அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்

By

Published : Nov 17, 2021, 11:04 PM IST

Updated : Nov 18, 2021, 6:14 AM IST

வேலூர்: காட்பாடியில் 68ஆவது கூட்டுறவு வார விழா இன்று (நவம்பர் 17) நடைபெற்றது. இந்த விழாவில் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.

ஆயிரத்து 151 நபர்களுக்கு 10 கோடி ரூபாய் மதிப்பிலான சிறு வணிகக் கடன், மகளிர் சுய உதவிக் குழு கடன், வேளாண்மைக் கடன் உள்ளிட்ட பல்வேறுகடன் உதவிகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்.

அமைச்சர் துரைமுருகன்
பல நாடுகள் முன்னேற்றம்

இந்த நிகழ்ச்சியில் பேசிய துரைமுருகன், கூட்டுறவுத் துறையில் பணிபுரிபவர்கள் நேர்மையாகப் பணிபுரிய வேண்டும் எனவும், தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் கைதுசெய்யப்படுவார்கள் என்றும் எச்சரித்தார். மேலும் அவர், "கூட்டுறவுத் துறையால் பல நாடுகள் முன்னேற்றம் அடைந்துள்ளன. கூட்டுறவுத் துறையில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் நல்ல திட்டங்கள்தாம்.

அமைச்சர் துரைமுருகன்

நேர்மையாகப் பணியாற்ற வேண்டும்

ஆனால், அதனைச் செயல்படுத்துவதில்தான் பல குறைகள் உள்ளன, அந்தக் குறைகள் களையப்பட வேண்டும். அதற்குக் கூட்டுறவுத் துறையில் உள்ள அனைத்து அலுவலர்கள், பொறுப்பாளர்களும் நேர்மையாகப் பணியாற்ற வேண்டும்.

கடந்த ஆட்சியில் போலி நகைகள், போலி ஆவணங்கள் வைத்து கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர். அவ்வாறு கடனுதவிகள் பெற்றவர்கள் கண்டிப்பாகக் கைதுசெய்யப்படுவார்கள். அந்த முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுவருகிறது.

அமைச்சர் துரைமுருகன்
மகளிர் வாங்கிய கடன்
கூட்டுறவுத் துறையில் மகளிர் வாங்கிய கடன்களை நேர்மையாகத் திருப்பிச் செலுத்திவருகின்றனர். ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் நடப்பாண்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 87 ஆயிரத்து 443 உழவருக்கு 617 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
ஐந்து சவரனுக்குள்பட்ட கடன் தள்ளுபடியில் இரண்டு லட்சத்து 476 உறுப்பினர்களுக்கு 160 கோடி ரூபாய் அளவிற்கு பொது நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் கடந்த மாதம் இறுதிவரை 25 ஆயிரத்து 803 உழவருக்கு 170 கோடி ரூபாய் அளவிற்குப் பயிர்க் கடன் (Crop Loan) வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் துரைமுருகன்
நடவடிக்கை எடுக்க வேண்டும்

நீர்நிலைகளில் எங்கு ஆக்கிரமிப்புச் செய்திருந்தாலும் அதனை உடனடியாகச் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அகற்ற வேண்டும். நீர்நிலைகள், ஏரிகள், ஆறுகள் ஆகியவற்றில் யார் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வேலூர் மாவட்டம் அகரம் ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்பை மாவட்ட ஆட்சியர் உடனடியாக அகற்ற வேண்டும்" என துரைமுருகன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Heavy Rain Alert: இன்று இரவு முதல் நாளை இரவு வரை சம்பவம் இருக்கு மக்களே - தமிழ்நாடு வெதர்மேன்

Last Updated : Nov 18, 2021, 6:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details