வேலூர்: காட்பாடியில் உள்ள கழிஞ்சூர் ஏரி மற்றும் தாராபடவேடு ஏரி ஆகிய இரண்டு ஏரிகளையும் சுற்றுலாத் தளமாக மாற்றுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. அதனை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அந்த ஆய்வில் மேயர் சுஜாதா துணை மேயர் சுனில் மற்றும் மண்டல குழுதலைவர் புஷ்பலதா, நீர் வளத்துறை அதிகாரி சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அப்போது தாராபடவேடு ஏரியில் அதிக அளவு குப்பைகள் இருந்ததாகவும், அதனை அகற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு அமைச்சர் துரைமுருகன் மேயரை பார்த்து உங்கள் மாநகராட்சி ஆட்கள் தான் இவ்வளவு குப்பை கொட்டிவிட்டு சென்றனர் என சொன்ன போது சிரிப்பை அடக்க முடியாமல் மேயர் சுஜாதா சிரித்தார்.
முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், "ஏரியை சுற்றுலாதளமாக மாற்றுவதற்கான பணிகள் சற்று வேகம் குறைவாக உள்ளது. இன்னும் வேகமாக பணிகள் நடக்க வேண்டும். மழை காலத்திற்கு முன்பு பணிகளை முடிக்க வேண்டும். நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம் தொடர்ந்து நடந்து வருகிறது.