மாசி அமாவாசையை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பாலாற்றில் 246ஆம் ஆண்டு மயானக் கொள்ளை நடைபெற்றது. இதில், ஆந்திரா, கர்நாடாகா ஆகிய மாநிலங்களிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது, சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் இருந்து பூ கரகம் பாலாற்றுப் பகுதிக்கு எடுத்துவரப்பட்டது. இதன்பின்னர் பாலாற்றில் மண்ணால் செய்யப்பட்ட அரக்கனுக்கு சுண்டல் கொழுக்கட்டை போன்ற பொருட்களை வைத்து படையல் செய்யப்பட்டது.