தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

8 வயது சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு இரட்டை ஆயுள்! - ஆயுள் தண்டனை

வேலூர்: எட்டு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கிணற்றில் வீசிச் சென்ற நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து வேலூர் மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

Man awared double Life sentence for rape and murder of a 8 year girl

By

Published : May 14, 2019, 10:10 PM IST

வாலாஜாபேட்டை வன்னிய மோட்டூர் பகுதியைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி உமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), கடந்த 11.05.2014 அன்று அரக்கோணம் அடுத்த பெருமாள்ராஜ் பேட்டை பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள தனது தாத்தா வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அப்போது, அருகில் கோயில் ஒன்றில் விளையாடிக்கொண்டிருந்த அந்த சிறுமியிடம் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் ஆசை வார்த்தை காட்டி தனது இருசக்கர வாகனத்தில் மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர், அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, காதில் அணிந்திருந்த கம்மலைக் கழட்டிவிட்டு, சிறுமியைக் கொன்று கிணற்றில் வீசிவிட்டு கார்த்திகேயன் தப்பியுள்ளார்.

8 வயது சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு இரட்டை ஆயுள்!

பின்னர், இரண்டு நாட்கள் கழித்து 13.05.2014 விஏஒ முன்னிலையில் கார்த்திகேயன் சரணடைந்தார். இதையடுத்து, கார்த்திகேயன் மீது அரக்கோணம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு வேலூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், சிறுமியை கார்த்திகேயன் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, கொடூரமாக கொலை செய்த குற்றம் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.9000 அபராதமும் விதித்து நீதிபதி எம்.செல்வம் இன்று தீர்ப்பளித்தார். இதையடுத்து, குற்றவாளி கார்த்திகேயன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

ABOUT THE AUTHOR

...view details