வேலூர் மாவட்டம், காட்பாடியில் கடந்த இரண்டு மாதங்களாகப் பல்வேறு வீடுகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடு போவதாக அடுத்தடுத்து புகார்கள் வந்தன. இப்புகாரின் அடிப்படையில் விருதம்பட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் காட்பாடி சில்க் மில் பகுதியில் காவல் துறையினர், வாகன சோதனையில் ஈடுபட்டபோது, சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லாமல் வந்த நபரை தடுத்து விசாரித்துள்ளனர்.
காவல்துறை விசாரணையில், அந்த நபர் காட்பாடி அருகேயுள்ள கிழிஞ்சூர் பகுதியைச் சேர்ந்த மதன் குமார்(24) என்பதும், கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக தொடர் வாகனத்திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞர் கைது இதனையடுத்து மதன்குமாரிடம், அவர் திருடிய வாகனங்களை மீட்ட காவல் துறையினர், அவர் மீது வழக்குப்பதிவு செய்து, பின் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மாணவனை வலுக்கட்டாயமாக தன்பால் ஈர்ப்புக்கு உட்படுத்தி கொலைசெய்தவருக்கு ஆயுள் சிறை