தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிநீர் பிரச்னை: பொதுமக்கள் சாலை மறியல்! - agitated public

வேலூர்: ஆம்பூரில் முறையாக குடிநீர் வழங்காப்படாததைக் கண்டித்து, சாலையில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

By

Published : May 13, 2019, 5:14 PM IST

வேலூர் மாவட்டம் மாதனூரையடுத்த அகரம் பகுதியில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. முறையாக தங்களுக்கு குடிநீர் வழங்கக்கோரி அப்பகுதி மக்கள் தங்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் பல முறை மனு கொடுத்துள்ளனர். மூன்று மாத காலமாகியும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதால் கோபமடைந்த பொதுமக்கள், மாதனூர் - ஒடுகத்தூர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பொதுமக்கள் சாலை மறியல்

இது தொடர்பான தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர், வேப்பங்குப்பம் காவல்துறையினர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வழங்க தகுந்த ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தனர். இந்த சம்பவத்தால் மாதனூர் - ஒடுகத்தூர் சாலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details