வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெரிய கம்மியம்பட்டு கிராமத்தில் வைக்கோல் ஏற்றிவந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக அங்கிருந்த மின்கம்பத்தின் மீது மோதியுள்ளது. இதனால் மின்கம்பம் மூன்று துண்டுகளாக உடைந்து, மின்சாரக் கம்பிகளிலிருந்து எழுந்த தீப்பொறியால் லாரியில் இருந்த வைக்கோலில் தீப்பற்றியது.
மின்கம்பத்தில் மோதி எரிந்த லாரி! - vellore
வேலூர்: ஜோலார்பேட்டை அருகே வைக்கோல் ஏற்றிவந்த லாரி மின்கம்பத்தில் மோதியதால் ஏற்பட்ட தீ விபத்தில் லாரியிலிருந்த வைக்கோல் முழுவதும் எரிந்து சாம்பலானது.
மின்கம்பத்தில் மோதி எரிந்த லாரி
இதைக்கண்டு அவசரமாக லாரியிலிருந்து குதித்த ஓட்டுநருக்கும் அவரது உதவியாளருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு மின்சாரத்தை துண்டிக்கச் செய்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.