திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஸ்டான் சாமி ஜார்கண்ட் மாநில பழங்குடியின மக்களுக்காக தொடர்ந்து போராடியவர். எல்கார் பரிஷத் வழக்கில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பல்வேறு உடல் உபாதைகள் காரணமாக அவர் கடந்த ஜூலை 5-ம் தேதி உயிரிழந்தார்.
ஸ்டேன் சாமி அஸ்திக்கு அஞ்சலி - stane samy
வேலூர்: ஜார்கண்ட் மாநிலத்தில் உயிரிழந்த ஸ்டான் சாமி அஸ்திக்கு வேலூரில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிலையில் அவரட்ஜி அஸ்தி இன்று காட்பாடியில் உள்ள டான்பஸ்கோ பள்ளிக்கு கொண்டுவரப்பட்டது. அங்குள்ள அரங்கத்தில் வைக்கப்பட்டு பாதிரியார்கள், பொது மக்கள் பிரார்த்தனை செய்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் ஸ்டேன் சாமியின் அஸ்தி தர்மபுரி மாவட்டம் கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, ஈரோடு ஆகிய பகுதிகளுக்கு சென்று அடுத்த மாதம் (ஆகஸ்ட் 3-ம் தேதி) திருச்சியில் உள்ள சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டு பின்னர் மீண்டும் ஜார்கண்ட் மாநிலத்துக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது.