தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கணவன், குழந்தையை கொன்று புதைத்த கொடூர மனைவி கைது! - எல்க்ட்ரீசியன்

வேலூர்: ஆற்காடு அருகே கணவர் மற்றும் ஒரு வயது குழந்தையை கொன்று புதைத்துவிட்டு நாடகமாடிய மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.

Lady buried husband and child near arcot

By

Published : May 18, 2019, 10:41 AM IST

வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரி பாடி பகுதியை சேர்ந்தவர் ராஜா (25). இவர் எல்க்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் மந்தைவெளியைச் சேர்ந்த தீபிகா(20) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரவின்குமார்(1) என்ற மகன் உள்ளான்.

இந்நிலையில் மே 13ஆம் தேதி, ஆற்காடு தாலுகா காவல்நிலையத்தில் தனது கணவர் மற்றும் மகனை காணவில்லை என்று தீபிகா புகார் கொடுத்துள்ளார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீபிகாவிடம் இது குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக அவர் பதில் அளித்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், 'கணவர் ராஜா மற்றும் மகன் பிரவினை எரித்து கொன்று அருகில் ஏரிக்கரையில் புதைத்ததாக' அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஆற்காடு வட்டாட்சியர் வத்சலா இராணிப்பேட்டை துணை கண்காணிப்பாளர் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் காவல்துறையினர் தீபிகாவின் கணவர் மற்றும் குழந்தையின் சடலங்களை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திமிரி பாடி

மேலும் இந்த சம்பவம் குறித்து தீபிகாவிடம் காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details