வேலூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் பாரதப் பிரதமரின் கிசான் திட்ட முறைக்கேட்டில் ஈடுபட்டதாக ஜோலார்பேட்டை பாஜக மேற்கு ஒன்றிய தலைவர் கண்மணி, பச்சூரை சேர்ந்த நாட்றம்பள்ளி உதவி வேளாண் அலுவலர் ஜெகன்நாதன் ஆகியோரை இரண்டு நாள்கள் விசாரணைக்கு பிறகு வேலூர் சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கிசான் திட்ட முறைகேடு: பாஜக பிரமுகர் கைது - பாஜக பிரமுகர் உள்பட இரண்டு பேர் கைது
கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக பாஜக பிரமுகர் உள்பட இரண்டு பேரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
kissan scheme Abuse: bjp person arrested in vellore
திருப்பத்தூர் மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தவர்களில் மொத்தம் இரண்டாயிரத்து 687 பேர் தகுதி அற்றவர்களாக கண்டறியப்பட்டு, சுமார் 60 லட்சம் ரூபாய் வரை திரும்பப் பெறப்பட்டுள்ளது. அம்மாவட்டத்தில் 80 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.