தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பத்திரம் மாற்றி அமைக்க ரூ.1 லட்சம் லஞ்சம் - சார் பதிவாளர், எழுத்தர் கைது - Vellore Bribery

வேலூர்: பத்திரம் மாற்றி அமைக்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய காட்பாடி சார் பதிவாளர், எழுத்தர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்தனர்.

katpadi-sub-registrar

By

Published : Oct 11, 2019, 7:41 PM IST

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கழிஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், கழிஞ்சுரில் உள்ள சசிகுமார் மற்றும் அவரது சகோதரர்கள் 4 பேருக்கு சொந்தமான பத்திரத்தை 5 பத்திரங்களாக மாற்றித் தருவதற்காக காட்பாடி சார் பதிவாளர் தேவராஜை அணுகியுள்ளார்.

சார் பதிவாளர் தேவராஜ் பத்திரத்தை மாற்றுவதற்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க மனம் இல்லாததால் சசிகுமார் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சசிகுமாரிடம் கொடுத்து அனுப்பி அந்தப் பணத்தை காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் சந்திரமோகன் என்பவரிடம் கொடுக்கச் சொல்லியுள்ளனர்.

லஞ்சம் பெற்ற சார் பதிவாளர், எழுத்தர் கைது

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சார் பதிவாளர், எழுத்தர் ஆகியோரை கையும் களவுமாகப் பிடித்தனர். இதுதொடர்பாக அவர்களிடம் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க...

குப்பைகளை நகராட்சி அலுவலகம் முன் கொட்டி மக்கள் வாக்குவாதம்!

ABOUT THE AUTHOR

...view details