வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக சார்பாக துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், அதிமுக சார்பாக புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
கதிர் ஆனந்துக்கு ஆதரவாக ஸ்டாலின் பரப்புரை! - dmk
வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் திண்ணை பரப்புரையில் ஈடுபட்டார்.
mk stalin
இந்நிலையில், கதிர் ஆனந்துக்கு ஆதரவாக வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளான மல்லகுண்டா, தெக்குப்பட்டு, ராமநாயக்கன் பேட்டை, திம்மாம்பேட்டை, திகுவாபாளையம், அம்பலூர், ஜப்ராபாத் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களிடையே திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை-மேற்கொண்டார். திண்ணையில் அமர்ந்து மக்களிடையே குறைகளைக் கேட்டறிந்த அவர், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த குறைகள் களையப்படும் என உறுதியளித்தார்.