ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுகாவில் உள்ளது கத்தாரிகுப்பம் ஊராட்சி. இது வேலூர் காட்பாடி தொகுதிக்கு உள்பட்ட பகுதியாக உள்ளது. இங்கு வசிக்கும் 300 வீடுகளில் 992 வாக்குகள் உள்ளன. இந்தக் கிராமத்தில் டயரை எரித்து அதிலிருந்து ரசாயனம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.
இந்தத் தொழிற்சாலையில் டயர்களை எரிப்பதனால், இப்பகுதி மக்களுக்கு சுவாச கோளாறு ஏற்படுகிறது என்றும் இந்த தொழிற்சாலையை அகற்றக்கோரியும் இப்பகுதி மக்கள் பல முறை போராட்டத்தில் ஈடுபட்டும், மனுக்கள் கொடுத்தும் உள்ளனர்.
அந்த வகையில், ஏப்ரல் ஒன்றாம் தேதி இந்த தொழிற்சாலையை அகற்றக் கோரி இப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இது வரை மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று (ஏப். 6) நடைபெற்று வரும் பொதுத்தேர்தலை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தலை புறக்கணித்த கத்தாரிகுப்பம் கிராம மக்கள் இப்பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று (ஏப். 6) காலை முதல் தற்போது வரை மொத்தம் 15 வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன. தொழிற்சாலையை நிறந்தரமாக மூடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாவட்ட நிர்வாகம் சார்பாக யாரேனும் நேரில் வந்து உத்தரவாதம் அளித்தால் மட்டுமே வாக்களிப்போம் என்றும் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்!