வேலூர்: முத்துரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், "சட்டமன்ற நாயகர் கலைஞர்" என்ற தலைப்பில் மாணவர்களுக்கான கருத்தரங்கம் இன்று (டிச.12) நடைபெற்றது. முத்துரங்கம் அரசினர் கலைக்கல்லூரி முதல்வர் மலர் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், தமிழக சட்டமன்ற பேரவை துணை சபாநாயகர், கு.பிச்சாண்டி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்த கருத்தரங்கில், வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு, "சட்டமன்ற நாயகர் கலைஞர்" என்ற தலைப்பில் பேசினர். இதில், சிறப்பாக பேசிய மாணவர்களுக்கு சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பரிசுகளை வழங்கினார்.
பின்னர், பேசிய துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, "முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் தமிழக வளர்ச்சிக்கு கொண்டுவந்த திட்டங்கள் ஏழை எளிய மக்களுக்கானதாக இருந்தது. ஒட்டுமொத்த இந்தியாவில் கல்வி வளர்ச்சியில் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் முன்னிலையில் உள்ளது. பீகார் போன்ற பல வடமாநிலங்கள் கல்வியில் பின்தங்கி இருக்கின்றன.