சென்னையின் குடிநீர் பற்றாக்குறையை போக்க ஜோலார்பேட்டையிலிருந்து தினமும் சென்னை 1 கோடி லிட்டர் தண்ணீர் கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. இதற்காக பெரிய அளவில் குடிநீர் தேக்கத்தொட்டி அமைத்து பைப்லைன் மூலம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் சுமார் 54,000 லிட்டர் கொள்ளவு கொண்ட 50 டேங்குகள் மூலம் இரு முறை சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரும் பணி தீவிரம் - jolarpet
வேலூர்: ஜோலார்பேட்டையிலிருந்து பைப் லைன் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது.
சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரும் பணி தீவிரம்
மேலும் நாளைக்குள் அனைத்துப் பணிகளும் முடித்து தண்ணீர் கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. முதற்கட்டமாக தண்ணீர் பைப் லைன் அமைத்து தண்ணீர் கசிவு ஏற்பாடுகிறதா என்ற ஆய்வில் இன்று அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.