50 மருத்துவர்களிடம் கையெழுத்து பெற்று இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்தினால் கரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்று கடிதம் ஒன்றை தமிழ்நாடு அரசிடம் நேற்று பீட்டா அளித்தது.
இது குறித்து வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த சாலை கனகராஜ், “தமிழ்நாட்டிலேயே அதிகமாக எருது விடும் திருவிழா நடைபெறக்கூடிய ஊர் வேலூர். இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு இவ்விழாவிற்காக சுமார் ஐந்தாயிரம் காளைகளை விவசாயிகள் வளர்த்துவருகின்றனர். அனைத்து மாடுகளும் எருதுவிடும் பங்கேற்பதற்காக மாடுகளை நன்றாக பராமரித்து ஆர்வத்துடன் உள்ளோம். மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் சிறப்பான ஒத்துழைப்பை அளித்து வருகிறது.
இச்சூழலில் பீட்டா (PETA) அமைப்பு மீண்டும் பழையபடி ஜல்லிக்கட்டு, எருதுவிடும் திருவிழா உள்ளிட்டவற்றை நிறுத்த வேண்டும் அறிக்கை விடுத்தும், மத்திய அரசிற்கு கோரிக்கைகளை வைத்தும் வருகிறது. இது மிகவும் தவறான ஒன்று. விவசாயிகள் போதிய அனுமதியுடன் இது போன்ற விழாவினை நடத்தி வருகிறது.
பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரிக்கை! இதில் எந்த ஒரு தவறான விஷயமும் இல்லை அப்படியே இருந்தாலும், அவற்றை மாடு வளர்ப்பவர்களோ, மாடு பிடி வீரர்களோ திருத்திக்கொள்கிறோம். மேலும் பொய்யான கருத்துக்களை முன் வைத்து ஜல்லிக்கட்டு உள்ளிட்டவற்றை தடை செய்ய வேண்டும் என்று முயற்சித்து வருகின்றனர். எனவே பீட்டாவை இந்தியாவில் தடை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...திறமை இருக்க பயம் எதற்கு?- பள்ளிப் படிப்பை முடிக்காத சிறுவன் பைக் உருவாக்கி சாதனை