தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.20 ஆயிரம் ஏமாற்றிய முன்னாள் சிறைக்கைதி! - சிறை கண்காணிப்பாளர்

சிறை கைதியிடம் நட்பாகப் பழகி, ஜாமினில் எடுப்பதாக நம்ப வைத்து முன்னாள் சிறை கைதி 20 ஆயிரம் ரூபாய் ஏமாற்றியுள்ளார்.

vellore  jail
வேலூர் சிறை

By

Published : Jul 17, 2021, 1:46 PM IST

வேலூர்:கடந்த 2018ஆம் ஆண்டு போக்சோ சட்டத்தில் கைதாகி, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன். அப்போது இவருக்கும், அதே சிறையில் இருந்த சுரேஷுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.

கடந்த 2019ஆம் ஆண்டு சுரேஷ் ஜாமினில் வெளியே சென்றார். அப்போது மணிகண்டனை ஜாமினில் எடுப்பதாகக் கூறிய சுரேஷ், அதற்காக 20 ஆயிரம் ரூபாய் வேண்டுமென கேட்டுள்ளார். வெளியில் வரவேண்டுமென்ற ஆசையில் மணிகண்டனும் தன் குடும்பத்தினரிடம் வாங்கிக் கொள்ளச் சொல்லியிருக்கிறார்.

கடந்த 2 ஆண்டுகளாக ஜாமினில் எடுக்காமல் ஏமாற்றிய சுரேஷ் குறித்து, வேலூர் மத்திய சிறையின் நல அலுவலர் மோகன், சிறை அலுவலர் குணசேகர் ஆகியோரிடம் மணிகண்டன் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரும் சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

உடனடியாக சிறை கண்காணிப்பாளர் காரிமங்கலம் காவல் ஆய்வாளரை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். தொடர்ந்து ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டார். மேலும், சுரேஷிடமிருந்து ரூபாய் 20 ஆயிரம் பணத்தைப் பெற்று மணிகண்டன் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார்.

இதையும் படிங்க: சிவசங்கர் பாபா வழக்கு - பெண் ஆசிரியர்கள் தலைமறைவு

ABOUT THE AUTHOR

...view details