தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் அலுவலர்களுக்கான பணி நியமன சான்று வழங்கல்!

தேர்தல் பணியில் ஈடுபடும் தேர்தல் அலுவலர்களுக்கான பணி நியமன ஆணையை வேலூர் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

தேர்தல் அலுவலர்களுக்கான பணி நியமன சான்று வழங்கல்
தேர்தல் அலுவலர்களுக்கான பணி நியமன சான்று வழங்கல்

By

Published : Mar 13, 2021, 4:47 PM IST

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச். 13) மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரம் தலைமையில் வேலூர், அனைக்கட்டு, காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம் ஆகிய ஐந்து தொகுதிகளுக்கு சட்டமன்ற தேர்தலில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பணி ஆணையை ஆட்சியர் வழங்கினார்.

பின்னர் தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்தல் அமைதியாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் மருத்துவ காரணங்களை கூறி தேர்தல் பணியிலிருந்து விலக்கு பெற முடியாது, அவசர மருத்துவ அறுவை சிகிச்சையில் ஈடுபடும் ஊழியர்கள், மருத்துவ சான்றை உறுதி செய்த பின்னரே விலக்கு அளிக்கப்படும், மற்றவர்களுக்கு விலக்கு அளிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

ABOUT THE AUTHOR

...view details