திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பண்ணைதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஷான் பாஷா(55). இவர் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 2019ஆம் ஆண்டு போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு விசாரணை கைதியாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
போக்சோவில் கைதான விசாரணை கைதி சிறையில் மரணம் - போக்சோ சட்டம்
வேலூர்: போக்சோவில் கைதான விசாரணை கைதி வேலூர் மத்திய சிறையில் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார்.
Central Jail
இந்நிலையில் நேற்று (ஆக 24) சிறையில் ஷான் பாஷாக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு ஷான் பாஷாவை சிறைக் காவலர்கள் கொண்டுசென்றனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு ரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பாகாயம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.