சில தினங்களுக்கு முன்பு திமுக பொருளாளர் துரைமுருகனின் வீடு, கல்லூரி மற்றும் அவரது நெருங்கிய நண்பர் சீனிவாசன், உதவியாளர் அஷ்கரர் அலி என துரைமுருகன் சம்பந்தப்பட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் ரூ.11.48 கோடி பணமும் வருமானவரித்துறையினரால் கைப்பற்றப்பட்டது. மேலும் சாக்கு மூட்டைகளில் பணம் கட்டி வைக்கப்பட்டு இருப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும்,
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்கே இந்த பணம் துரைமுருகன் தரப்பு மறைத்து வைத்திருக்கிறது, இதனால் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் போட்டியிட தடை விதிக்க வேண்டும் எனவும் பல்வேறு கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.
வேலூர் சுயேச்சை வேட்பாளர் கதிரவன் இந்நிலையில், மக்களை பாதிக்கும் வகையில் நடைபெறவுள்ள தேர்தலை தள்ளி வைக்காமல், ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம் என்ற அடிப்படையில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என வேலூர் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் கதிரவன் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் மனு அளித்துள்ளார்.