வேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடி சன்பீம் மெட்ரிக்(Sunbeam CBSE school), சி.பி.எஸ்.இ ஐ.சி.எஸ்.இ. பள்ளிகளின் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளிகளின் தலைவர் ஹரிகோபாலன் தலைமை தாங்கினார். தாளாளர் தங்கபிரகாஷ், முன்னிலை வகித்தார். பள்ளி துணைத்தலைவர் ஜோன் ஆர்த்தி வரவேற்புரை ஆற்றினார். இந்த விழாவில் சிறப்பு விருந்திநராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் கலந்துகொண்டார்.
நீட் தேர்வில் (NEET Exam) தமிழ்நாடு மற்றும் ஆந்திராவின் 13 மாவட்டங்களில் முதலிடம் பிடித்த மாணவர் தமிழ்ச்செல்வன், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்த மாணவர் பயாஸ் ஜமால், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவி ஜோதி ரோஷினி, இரண்டாம் இடம் பிடித்த மாணவர் ஆர்.கோ.முகர்ஜி ஆகியோருக்கு விருதும் பதக்கங்களும் அளிக்கப்பட்டன.
அத்தோடு, ஒவ்வொரு பாடத்திலும் முழு மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் சயின்ஸ் பீம் தேர்வில் (Science Beam Exam) வகுப்பு வாரியாக முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகள் என 900 பேருக்கு விருதுகளை வழங்கினார்.
பின்னர் விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் பேசுகையில், இந்த விழாவை பார்க்கும் போது, தன்னுடைய பள்ளிக்கால நினைவுகள் நினைவுக்கு வருவதாகவும், பள்ளியில் படித்து விட்டு வெளியே வந்த பின்பு நாம் பள்ளியில் நடந்தவற்றை நினைவு கூர்ந்து பார்ப்பதாகவும் கூறினார். நீங்கள் படிக்கும் போதே, உங்கள் ஆசிரியர்களுக்கு மதிப்பு, மரியாதை அளிக்க வேண்டும் என்றும் படிக்கும் காலத்திலேயே அவர்களை நேசிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.